173
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்ததாக கூறப்படும் கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாஜீர் எம்.அப்துல்லா என்ற இந்த இளைஞர் கொல்லப்பட்டு காணப்படும் புகைப்படம் வட்ஸ்-அப் மூலம் ஒருவருக்கு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷாஜீர் எப்போது, எப்படி இறந்தார் என்பதற்கான எவ் வித விவரமும் அத்தகவலில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இது குறித்து தங்களுக்கு எதுவும் அதிகாரபூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love