குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலமாறு நீதிப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமானது என லண்டனை மையமாகக் கொண்டு இங்கி வரும் க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் நீதித்துறை தொடர்பில் அண்மையில் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியான மொனிக்கா பின்டோ, கடுமையான விமர்சனங்களுடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கை வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து க்ளோபல் தமிழ் போராம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது என சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் சர்வதேச சமூகமும், இலங்கை அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டுமேன தெரிவித்துள்ளது.
பக்கச்சார்பற்ற, நம்பகமான காத்திரமான காலமாறு நீதிப்பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமெனவும் அதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பும் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் நீடித்துக் நிலைக்கக்கூடிய சமாதான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.