இலங்கை

அஸ்கிரி பீடத்தின் கடுமையான அறிக்கை குறித்து அரசாங்கம் ஆராய்கின்றது – சுகாதார அமைச்சர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கண்டி அஸ்கிரி பீடத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடுமையான அறிக்கை குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தக் கூடாது எனவும், ஞானசார தேரரின் நிலைப்பாட்டை மதிக்க வேண்டுமெனவும், சிங்கள பௌத்தர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு ரீதியாக சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரதன தேரர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாட்டை பாதுகாப்பதற்கே பௌத்த பிக்குகள் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையை முழுமையாக ஆராய்ந்ததன் பின்னர் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என அவர் குறிப்பட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply