குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய லொத்தர் சபை எவ்வாறு வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது என ஜே.வி.பி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. எந்த அடிப்படையில் தேசிய லொத்தர் சபை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரையில் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது துறைசார் அமைச்சரோ பதிலளிக்கவில்லை என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
லொத்தர் சபை சட்டத்தின் அடிப்படையில் லொத்தர் சபையின் துறைசார் அமைச்சராக நிதி அமைச்சரே பதவி வகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சின் கீழ் லொத்தர் சபையை கொண்டு வர வேண்டுமாயின் சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி அமைச்சு குறித்த நம்பகத்தன்மை மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.