146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண ஆளுனரிடம் வடமாகாணசபை உறுப்பினர்களால் வடமாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரனுக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்றையதினம் மீளப்பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் ஐயுப் அஸ்மின் ஆகிய இருவரும் இணைந்து, ஆளுநரிடமிருந்து அந்தப் பிரேரணையை திரும்பப் பெற்றுக்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
1 comment
முதலமைச்சரின் நடவடிக்கைகளில் யாரும் குறைகாண முடியாது! முதல்வர் மீது ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவசர அவசரமாகக் கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்த முடியாது போனமையினால், மக்கள் மனதில் முதல்வர் இன்னும் ஒரு படி மேலோங்கியே காணப்படுகின்றார்!
நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தவர்களுக்கும் பின் விளைவுகள் குறித்த புரிதல் இல்லாதிருந்திருக்கவும் முடியாது! ஆக, இதை ஒரு அச்சார நடவடிக்கையாக முன்னெடுத்து இருப்பார்களென நம்பலாம்! முதலமைச்சர் கதிரைக் கனவு காணும் அவைத் தலைவர் உட்படச் சூடு பட்டவர்கள் சும்மா இருக்கப் போவதில்லை என்பதோடு, ‘திரு. விக்னேஸ்வரன் எதிர்கால மக்கள் தலைவன் ஆகிவிடுவார்’, என்ற பயம் இன்று மும்மூர்த்திகளையும் கிலி கொள்ளச் செய்திருக்குமென்பதையும் மறுக்க முடியாது! இதை உறுதி செய்வது போல், சூட்டோடு சூடாக, முதலமைச்சருக்கு எதிரான ஒரு (ஊழல்?) குற்றச்சாட்டைக் கனடாவில் இருந்து முன்மொழிந்து
இருக்கின்றார்கள்! இது மட்டுமன்றி இன்னும் பல குற்றச்சாட்டுக்களைச் சல்லடை போட்டுத் தேடி முன்வைக்க முயலுவார்களென்பதும், எதிர்பார்க்கக் கூடியதொன்றே!
ஆக, இவை எல்லாவற்றையும் பொய்யாக்கி, முதல்வர் மக்கள் தலைவராவதை யாராலும் தடுக்க முடியாது! மாறாக, சர்வதேச நாடுகளும், இலங்கை அரசும் சதி செய்து இவரை மக்களிடமிருந்து பிரிப்பதில் வெற்றி கண்டாலும் ஆச்சரியப்பட முடியாது! நம்புவோம், நல்லதே நடக்கும்!