குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் காலவரையறையற்ற போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
நாடு தழுவிய ரீதியில் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், இலங்கை மருத்துவ பேரவையின் தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேகாவின் பதவிக் காலம் நீடிக்கப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிட்டும் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் கார்லோ பொன்சேகாவிற்கு மேலும் ஆறு மாத கால பதவி நீடிப்பு வழங்கப்பட முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் எனினும், சுகாதார அமைச்சர் அவரது பதவிக் காலத்தை நீடிக்க விரும்பவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல்களினால 87பேர் படுகாயமடைந்தநிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் நோக்கத்தக்கது.