இலங்கை

மத முரண்பாடுகளை ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சி – பொதுபல சேனா


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டில் மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

வெளிநாட்டு பணத்தைக் கொண்டு இவ்வாறு சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மகா சங்கத்தினர் மற்றும் பௌத்த சாசனத்திற்கு இழிவை ஏற்படுத்தும் முயற்சியில் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக அமுல்படுத்தப்படும் சட்டங்கள் நாட்டின் ஏனைய தரப்பினருக்கு எதிராகவும் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள பொதுபலசேனா நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலையை கருத்திற் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply