குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்ட கரையோரப் பகுதிகளில்கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான செயற்திட்ட அறிமுக கலந்துரையாடல் மாவட்டசெயலகத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில்இன்று(22.06.2017) இடம்பெற்றது.
இலங்கை சிறு மீனவ சம்மேளனத்தின்அனுசரனையுடன் கிளிநொச்சி மாவட்டத்தில்அறிமுகம்செய்யப்படவுள்ள கண்டல்தாவரங்களை பாதுகாப்பதற்கான கண்டல்தாவரமர நடுகைத்திட்டம் கரையோர சமூகங்களின்வாழ்வாதார அபிவிருத்திதிட்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைக்கும் இக்கலந்துரையாடலில் மேற்படி அமைப்பின் தலைவர் அனுராத விக்கிரமசிங்க திட்ட முகாமையாளர் ஜெயதிலக மற்றும் யாழ்பல்கலைகழகவிரிவுரையாளர் திருமதி ஜி.ராஜினி போன்றோர் கலந்துகொண்டு திட்டம் தொடர்பான விளக்கம் அளித்தனர்.
மேலும் இத்திட்டத்தின் அறிமுக கலந்துரையாடலை அடுத்து பிரதேசமட்டத்தில் நடைபெற்று பின்னர் கிராமமட்டங்களில் அமுல்படுத்தப்படும் என தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பிரதேசசெயலாளர்கள் மாவட்டஉதவிதிட்டபணிப்பாளர், மீன்பிடி உதவிப்பணிப்பாளர் வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் பொலிஸ்திணைக்கள உத்தியோகத்தர்கள் கரையோரபாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடற்தொழில்சங்கங்கள் என பலர் கலந்துகொண்டனர்.