குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால் சுகாதார அமைச்சிற்கு ஏற்பட்ட நட்டம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சிற்கு அருகாமையில் உள்ள சீ.சீ.ரீ.வி கட்டமைப்புக்களின் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் பலவந்தமான அத்து மீறி சுகாதார அமைச்சிற்குள் பிரவேசித்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் அத்து மீறி பிரவேசித்த காரணத்தினால் பாரியளவில் சொத்துக்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment