சவூதி அரேபியாவில் உள்ள புனிதநகரான மெக்கா நகரத்தில் உள்ள மசூதிக்கு வெளியே கடும் பாதுகாப்பையும் மீறி ஒரு தீவிரவாதி ஒருவர் நேற்றையதினம் வெடிகுண்டுகளுடன் உள்ளே நுழைய முயற்சித்த நிலையில் காவல்துறையினர் தீவிரவாதியை சுற்றிவளைக்க முற்பட்டனர்.
இதனையடுத்து குறித்த தீவசிரவாதி தன்னுடன் கொண்டு வந்த குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதில் ஒரு கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. இதனால், 11 யாத்திரிகர்கள் காயமடைந்துள்ளனர் என அறிவிப்பட்டுள்ளது.
இதனையடுத்து நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இந்த தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்தவருடம் ஜூலை மாதம் மற்றொரு புனித நகரமான மதீனாவில் ஐ.எஸ் அமைப்பினர் தற்கொலைத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். எனவே, இந்த தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.