குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
தற்போதைய அரசாங்கத்திற்கு கண்டி அஸ்கிரி பீடம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் கல்வி, கலாச்சாரம் ஆகியனவற்றை இல்லாமல் செய்ய முயற்சி எடுத்து வருவதாகவும் இதற்கு எதிராக மாநாயக்கர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அஸ்கிரி பீடத்தின் உப பீடாதிபதி வெடருவே உபாலி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பில் மாநாயக்க தேரர்களினால் மட்டுமே தீர்மானம் எடுக்கப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கலகொடத்தே ஞானசார தேரரின் பிரச்சினை மட்டும் பிரச்சினை கிடையாது எனவும் கலை, கலாச்சாரம் மற்றும் சமூகம் என பல்வேறு விடயங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை தீர்ப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.