குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
இலங்கையில் சேவையாற்றுவதற்கு 5000 அரச மருத்துவர்கள் அழைக்கப்பட உள்ளனர். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து மருத்துவர்களை அழைத்து வருவது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வெளிநாட்டு மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு துறைசார் மருத்துவர்களை கடமையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டால் அவர்களின் உதவிக்காக மொழி பெயர்ப்பாளர்களையும் கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும் அரசாங்கத்தின் மற்றுமொரு தரப்பினர் வேறு யோசனை ஒன்றை முன்வைத்த காரணத்தினால் வெளிநாடுகளிலிருந்து மருத்துவர்களை அழைத்து வருவது குறித்த யோசனை குறித்த இறுதித் தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை.