இந்தியா

சவுதி அரேபியாவில் அடிமையாக வைக்கப்பட்டுள்ள தாதியை மீட்க உதவுமாறு இந்திய தூதரிடம் சுஷ்மா கோரிக்கை

சவுதி அரேபியாவில் அடிமையாக வைக்கப்பட்டுள்ள  கர்நாடக மாநில தாதியை  மீட்க உதவும்படி, அங்குள்ள இந்திய தூதருக்கு இந்தியவெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த தாதி ஜெசிந்தா மென்டோன்கா வேலைக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளநிலையில்  அங்கு கட்டாயப்படுத்தி அவரை அடிமையாக்கி உள்ளனர். அவரை விடுவிக்க வேண்டு மானால், 24 ஆயிரம் சவுதி ரியால்கள் தரவேண்டும் என்று அவரது நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ட்விட்டரில் வெளியான தகவலைப் பார்த்த அமைச்சர் சுஷ்மா, ஜெசிந்தாவை மீட்க உதவும்படி சவுதியில் உள்ள இந்திய தூதர் அகமது ஜாவீத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.