மயிலாப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.
மயிலாப்பூர் தெப்பக்குள பேருந்து நிறுத்தம் எதிரே மற்றும் மயிலாப்பூர் புகையிரத நிலையம் அருகே உள்ள மதுபானக் கடைகளால் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவிகள் அதி கம் பாதிக்கப்படுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன.
இதனால் அக்கடைகளை நிரந்தரமாக மூட வேண் டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்த போதும் அவை அகற்றப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து நேற்றுக்காலை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். குறித்த பகுதியக்கு சென்ற மயி லாப்பூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 50 பேரை கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.