Home விளையாட்டு மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றியீட்டியுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய  அணி இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் 105 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.

மழை காரணமாக போட்டி 43 ஓவர்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 310 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அஜின்கே ரஹானா 103 ஓட்டங்களையும், விராட் கொஹ்லி 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அல்சாரீ ஜோசப் 2 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இதில் சாய் ஹோப் 81 ஓட்டங்களையும், ரொஸ்டன் சேஸ் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.  போட்டியின் ஆட்ட நாயகனாக அஜின்கே ரஹானா தெரிவு செய்யப்பட்டார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More