குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லாட்சியை தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேன விஜேசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் அபிலாஸைகளை பூர்த்தி செய்வதாகவும் ஊழல்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதி அளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதாகவும் எனினும் அரசாங்கம் தற்போது அனைத்தையும் மறந்துவிட்டு செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது அரசியல் சாசனத் திருத்தங்களை செய்வதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் இணங்கியுள்ள நிலையில், நல்லாட்சியை எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு மாத காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை 100 நாட்களில் செய்வதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.