உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவத்தினை முறைமைப்படுத்தல் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறசேன தலைமையில் இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
கழிவுகளை மீள்சுழற்சி செய்தல், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிரதேசங்களில் குப்பைகளை அகற்றுதல், குறுகிய காலத்தில் சேதனப்பசளை உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரங்களை அறிமுகப்படுத்தல், கழிவு முகாமைத்துவத்தினை முறைமைப்படுத்தலுக்காக தனியார் துறையின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ளல், கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மக்களை தெளிவூட்டல், பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல் தொடர்பான வர்த்தமானியை வெளியிடல் மற்றும் கழிவு முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தல் பற்றிய வழிகாட்டியை செயற்படுத்தல் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
உள்ளூராட்சி நிறுவனங்களினால் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் கழிவுகள் கொட்டப்படும் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக உயர்ந்தபட்ச சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இதன்போது பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி குறித்த பிரதேசங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார்.