சயிட்டம் மருத்துவ கல்வி நிறுவனம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜிந்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி, சுகாதார அமைச்சு மற்றும் உயர் கல்வியமைச்சு என்பன இணைந்து குறித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்துள்ளன.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து அதிர்ப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் வேலைநிறுத்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதிக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தேவைக்கு இணங்க குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment