குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று புதன் கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மூன்றாம் மாடியில் ட்ரயலட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகின்றது
அதன் போது பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா இன்று முன்னிலையாக உள்ளார். இந்தநிலையில் இன்று வழக்கின் சாட்சி பதிவுகள் ஆரம்பமாக உள்ளன.
இன்று ஆரம்பமாகும் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 29ஆம் , 30ஆம் , 3ஆம் , 4ஆம் , மற்றும் 5ஆம் திகதிகளில் தொடர் விசாரணைகளாக நடைபெறவுள்ளது.
குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் 09 பேர் எதிரிகளாக பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கு எதிராக 41 குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 37 சாட்சியங்கள் சாட்சியமளிக்க உள்ளனர்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சாட்சியங்கள் நாளை பதிவு – பதில் சட்டமா அதிபர் முன்னிலையாகவுள்ளார்
Jun 27, 2017 @ 10:24
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா நாளைய தினம் முன்னிலையாக உள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நாளைய தினம் புதன் கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மூன்றாம் மாடியில் ட்ரயலட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.
அதன் போது பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா நாளைய தினம் முன்னிலையாக உள்ளார். நாளைய தினம் வழக்கின் சாட்சி பதிவுகள் ஆரம்பமாக உள்ளன.
நாளைய தினம் ஆரம்பமாகும் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 29ஆம் , 30ஆம் , 3ஆம் , 4ஆம் , மற்றும் 5ஆம் திகதிகளில் தொடர் விசாரணைகளாக நடைபெறவுள்ளது.
குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் 09 பேர் எதிரிகளாக பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கு எதிராக 41 குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 37 சாட்சியங்கள் சாட்சியமளிக்க உள்ளனர்.