177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் கிறிசாந்த டி சில்வாவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி, ஜெனரலாக அவர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
முப்படைத் தளபதிகளில் அதிகளவு அனுபவம் கொண்டவராக இராணுவத் தளபதி திகழ்கின்றார். பதவி நீடிப்பின் அடிப்படையில் இராணுவத் தளபதி இராணுவத்தில் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் இராணுவத் தளபதிக்கு விசேட இராணுவ மரியாதை அணிவகுப்பு ஒன்று வழங்கப்பட உள்ளது.
Spread the love