இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு 6 மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒழுக்க விதிகளை மீறியதாக லசித் மாலி;ங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லசித் மாலிங்க, ஸ்ரீலங்கா கிரிக்கட்டுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் சரத்துக்களை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லசித் மாலிங்கவிற்கு எதிராக நேற்றைய தினம் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டிருந்தது. எவ்வாறெனினும் சிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டித் தொடரில் லசித் மாலிங்க விளையாடுவார் எனவும் அதன் பின்னரே அவருக்கான போட்டித் தடை விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிம்பாப்வேக்கான போட்டித் தொடரின் கொடுப்பனவு தொகையில் 50 வீதம் மாலிங்கவிற்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.