177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுடன் தமக்கு எவ்வித தனிப்பட்ட பகையும் கிடையாது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக கருத்து வெளியிடுமாறு லசித் மாலிங்கவை ஊடகங்கள் தூண்டியதாகத் தெரிவித்துள்ளார்.
லசித் மாலிங்க தொடர்ந்தும் இலங்கை அணியின் சார்பில் விளையாடுவதில் தமக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லசித் மாலிங்கவிற்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love