குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாளைய தினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளைய தினம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வார்த்தையை ஏற்றுக் கொண்டே தாம் போராட்டத்தை கைவிட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்ட ஊடக அறிக்கை முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். போராட்டமொன்று மீளவும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.