175
மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான முஸ்தஃபா தொசா இன்றையதினம் உயிரிழந்துள்ளார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 60வயதான முஸ்தஃபா தொசா இரண்டாம் கட்ட விசாரணையில் ஏனைய 5 பேருடன் சேர்த்து குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் இன்று அதிகாலை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1993 இடம்பெற்ற மும்பை தொடர் குண்டு வெடிப்புகளால் 257 பேர் கொல்லப்பட்டதுடன் 713 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love