குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வியட்னாமின் முன்னணி இணைய செயற்பாட்டாளர் ஒருவருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வியட்நாமின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான Nguyen Ngoc Nhu Quyn க்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுச் சிந்தனையாளர்களை முடக்கும் நோக்கில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்ய பதினைந்து நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.