இந்தியா

கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட வயலில் திடீரென தீ– காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல்

கும்பகோணம் கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட வயலில் திடீரென தீபிடித்ததனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்த எண்ணெய் குழாய்களில் இன்று திடீர் கசிவு ஏற்பட்டதனால் மாவட்ட ஆட்சியர் எண்ணெய் கசிவு ஏறபட்ட இடத்தை பார்வையிட வேண்டும் என அப்பகுதி மக்கள் காலையில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் மாவட்ட ஆட்சியர் வராமல்  காவல்துறை அதிகாரிகளே கசிவு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர்.  இதற்கு ஏதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் காபவல்துறையினருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. தீயை அணைத்த காவல்துறையினர்  பொதுமக்கள் மீது தடியடி மேற்கொண்டு  கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால்  காவல்துறையினருக்கும் மக்களும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல்களின் போது  2 காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டதனால்  பொதுமக்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  காவல்துறையினரே  தீ வைத்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களாக கதிராமங்கலம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply