200
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வாகன விபத்து ஒன்று தொடர்பில் அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
78 வயதான நபர் ஒருவரின் மீது வாகனம் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தற்செயலாக நடந்த ஒர் விபத்தாக கருதப்பட முடியாது என அரச தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும் வேண்டுமென்றே வாகனத்தை மோதவில்லை என வீனஸ் வில்லியம்ஸ் தரப்பு சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 9ம் திகதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love