இந்தியா

ஒரே நாடு, ஒரே வரி – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.  நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த  விழாவில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் சேர்ந்து இதனை ஆரம்பித்து வைத்தனர்.

இந்தியா  சுதந்திரம் அடைந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய வரிச் சீர்திருத்தம் இதுவாகும்.

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி   நடைமுறைக்கு வந்ததால் மாநிலம் மற்றும் மத்திய அரசு விதிக்கும் 17 விதமான வரி விதிப்பு முறைகள் ஒழிந்து ஒரு முனை வரி மட்டுமே வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 128 கோடி மக்களும் இனி ஒற்றை வரி விதிப்பு முறையின் கீழ் வந்துள்ளனர்.

இப்புதிய வரி விதிப்பு காரணமாக ஒருமுகப்படுத்தப்படும் வரி விதிப்பு களால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து அரசின் வரி வருமானம் அதிகரிக்கும். கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசு மேற்கொண்ட மிகச் சிறந்த பொருளாதார சீர்திருத்தமாக இது கருதப்படுகிறது.

நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சி 2 சதவீதம் உயர்வதற்கு ஜிஎஸ்டி உறுதுணை புரியும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி அறிமுக  விழா இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

ஜிஎஸ்டி அமுலாக்கமானது ஒரு கட்சிக்கான வெற்றி அல்லஎன்றும் இது அனைத்து கட்சியினரின் முயற்சிகளுக்கும் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார்.

நீண்ட காலம் யோசித்து அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு பல ஆண்டுகளாக பேச்சு நடத்தியதற்கு கிடைத்த வெற்றி என்றும் கூட்டாட்சி தத்துவதற்கு இது மிகச் சிறந்த உதாரணம் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஒருங் கிணைக்க சர்தார் வல்லப பாய் படேல் மேற்கொண்ட முயற்சி தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளதாகவும் மோடி பெருமிதமாக கூறினார்.

லொரிகள் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பது இதனால் முடிவுக்கு வரும். 31 மாநிலங்களும், அனைத்து யூனியன் பிரதேசங்களும் இதன் மூலம் ஒன்றுபட்டுள்ளது. இது வெளிப்படையான வரி விதிப்பு முறையாகும். இது கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், ஊழலை ஒழிக்கவும் உதவும். நிர்வாகத்தில் புதிய கலாச்சாரத் தை ஏற்படுத்த உதவும் என்றும் மோடி நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் அதிகாரி களின் கெடுபிடிக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும். இதன் மூலம் வர்த்தகர்கள் அடையும் பலனை பொதுமக்களுக்கும் அளிப்பார்கள் என நம்புதாகவும் மேடி குறிப்பிட்டார்.

புதிய கண்ணாடிக்கு ஏற்ப கண்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்கிறதோ அதைப்போல வர்த்தகர்கள் ஜிஎஸ்டிக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி என்றால் நல்ல, எளிமையான வரி என்பதாகும் என்றார்.

எந்தவொரு இலக்கை அடைய முடியாது என்று தோன்று கிறதோ அதை கடின உழைப்பால் அடைய முடியும்” என்று கூறியிருந்ததை சுட்டிக் காட்டினார். ஜிஎஸ்டி-யானது வரி சீர்திருத்தம் அல்ல, இது பொருளாதார சீர்திருத்தம் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மேலும் கூறியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply