ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவித்துள்ளன என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கிளிநொச்சியில் யாழ்.பல்கலைக்கழக வளாகமாக விவசாய, பொறியியல் பீடங்களின் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாய பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் திறன் அபிவிருத்தி கட்டடத்தொகுதியும் பொறியியல் பீடத்திற்கான இரண்டு மாடிக்கட்டடமும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைமைகளின் ஒத்துழைப்புடன் அரசியல மைப்பிற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் தேசிய அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டு வந்த தமிழ் மக்களுக்கு நன்றி. எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இடம்பெறமாட்டாது என்றும் அவர் தெரிவித்தா்ர.
நாங்கள் பாடசாலைக்கு செல்லும் காலத்தில் எங்களுடை பெற்றோர் யாழ்ப்பாண மாணவர்கள் போன்று கல்வியைப் பயிலுங்கள் என்று கூறிக்கொண்டே இருப்பதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
கடந்த காலத்தில் இரண்டு புதிய அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1972ஆம் ஆண்டு முதற்தடவையாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு இரண்டவாது தடவையாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் அரசியல் கட்சிகள் அதில் பங்களிப்புக்களைச் செய்திருக்கவில்லை என்றும் அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளின்போது தமிழ் அரசியல் கட்சிகள் புறக்கணிப்பினையே செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறிருக்கையில் வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்றத்தில் வட்டமேசையில் அமர்ந்து புதிய அரசியலமைப்பிற்கான புது வரைபொன்றை தயாரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் பேசினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிகாரப்பகிர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளன. முதற்தடவையாக பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்து
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தபோது ஆசிய மற்றும் உலக நாடுகளில் உள்ள அனைவரும் இலங்கையை முன்மாதிரியாக பார்த்தார்கள். உதாரணமாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் எங்களுடைய இலக்கு இலங்கையைப்போன்று வருவதாகும் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் 1950களில் இனவாத அரசியல் தலைதூக்கியது. அதிகாரத்தினை தமதாக்குவதே பிரதான இலக்காக இருந்தது. யாரும் விரும்பாத ஆயுத கலாசாரம் தோற்றம் பெற்றது. தற்போது முப்பது வருடகாலம் வீணாக்கப்பட்டுள்ளது. தற்போது இனவாத அரசியல் சம்பந்தமாக அனைத்து கட்சிகளும் தம்மை மீட்டிப்பார்த்து ஒரு முடிவுக்கு வந்துள்ளன.
அதனடிப்படையிலேயே அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் வட்டமேசைக்கு வந்துள்ளார்கள் என்று . நான் நினைகின்றேன் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட், செப்டம்பரில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் லக்ஸ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்தார்.