171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய பாதுகாப்புத் தரப்பினர் சைபர் தாக்குதல் நடத்தியதாக உக்ரேய்ன் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்மையில் உக்ரேய்னில் இடம்பெற்ற சைபர் தாக்குதல்களுக்கு ரஸ்யாவே பொறுப்பு எனவும் முக்கியமான தகவல்களை அழித்து, பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டு உக்ரேய்னில் சைபர் தாக்குதல் நடத்திய அதே ரஸ்ய தரப்பே இம்முறையும் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை ரஸ்யா முற்று முழுதாக நிராகரித்துள்ளது.
Spread the love