தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடகாவில் விவசாய அமைப் பினர் கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் காவிரி யிலும், அதன் துணை நதிகளான ஹேமாவதி, ஹாரங்கி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து கணிச மாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய அமைப்பினர் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
காவிரி நதி பாதுகாப்பு குழுவினர் நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியமையினால் விவசாய அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது