குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் நாட்டை பிளவடையச் செய்யும் நோக்கில் அரசியல் சாசனம் உருவாக்குகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பதுளை மெதகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால், அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு கூட்டு எதிர்க்கட்சியின் எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இன்றைய தினம் விசேட கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
இந்தநிலையில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சசான இணைக்குழுக்களிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் கட்சியை தோல்வியடைச் செய்து கூட்டு எதிர்க்கட்சி அபார வெற்றியீட்டும் என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தில் திருத்தங்களை செய்ய மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.