விளையாட்டு

கூட்டுறவு கிண்ண கால்பந்து தொடரில் ஜேர்மனி வெற்றி:

ரஸ்யாவில் இடம்பெற்ற 8 அணிகள் பங்கேற்ற கூட்டுறவு கிண்ண கால்பந்து தொடரின் பரபரப்பான இறுதி போட்டியில் ஜேர்மனி வெற்றிபெற்றுள்ளது.

தொடரின் லீக் போட்டிகள் முடிவில் போர்த்துக்கல், சிலி, மெக்சிகோ, ஜெர்மனி அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தன.

முதல் அரையிறுதிப் போட்டியில் சிலி – போர்த்துக்கல் அணிகள் போட்டியிருந்த நிலையில்  அதில் சில அணி வெற்றி பெற்று  வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

மற்றைய அரை இறுதி போட்டியில் உலக சம்பியன்களான ஜெர்மனி மற்றும் மெக்சிகோ அணிகள் போட்டியிட்ட நிலையில் 4-1 எனும் அடிப்படையில் வெற்றிபெற்ற ஜேர்மனி இறுதி போட்டியை எட்டியது.

இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற இறுதி போட்டியில் ஜேர்மனி மற்றும் சிலி அணிகள் போட்டியிட்ட நிலையில்  1-0 என்ற அடிப்படையில்  ஜேர்மனி வெற்றி பெற்றது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.