கதிராமங்கலத்தில் காவல் துறையை கண்டித்து நேற்று 2வது நாளாக கடையடைப்பு மேற்கொள்ளப்ப்பட்டது. அதேவேளை எதிர்வரும் ஜூலை 10-ம்திகதி கதிராமங் கலம் கிராமத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவது என தஞ்சாவூரில் நடைபெற்ற அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங் கலத்தில் கடந்த 30ம் திகதி எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
காவல்துறையினர் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை கலைத்தனர். இதில், பலர் காயமடைந்த நிலையில் காவல்துறையினரின் செயலைக் கண்டித்து நேற்று 2வது நாளாக கடையடைப்புப் போராட்டம் தொடர்ந்தது.
இதையடுத்து, கிராமத்தைச் சுற்றிலும் 200 காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், கிராம மக்கள் வீ்ட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர்.
இந்தநிலையில் காவல்துறையினர் தாக்குதலைக் கண்டித்து அனைத் துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம், தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் குழு கதிராமங்கலம் சென்று மக்களை சந் தித்து, அவர்களின் முறையீட் டைக் கேட்டு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனவும் இல்லையென்றால் வரும் 10ம்திதிp கதிராமங்கலத்தில் நுழைந்து போராட்டம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.