இலங்கை

சிங்கள இனத்தை விருத்தி செய்ய முனைப்பு காட்ட வேண்டும் – மேல் மாகாண முதலமைச்சர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிங்கள இனத்தை விருத்தி செய்வதற்கு முனைப்பு காட்ட வேண்டுமென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார். நுகேகொடை எம்புல்தெனிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எமது சிங்கள தாய்மார் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுத்து வளர்த்தால் மட்டுமே நாட்டையும், இனத்தையும், பௌத்த மதத்தையும் பாதுகாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எமது சிங்களத் தாய்மார் சிறிய குடும்பம் போதும் என ஒன்றிரண்டு பிள்ளைகளையே பெற்று வளர்க்கின்றார்கள் எனவும், தாங்கள் பிள்ளைகளை பெற்று வளர்க்காது சிங்களத் தாய்மார் முஸ்லிம் தாய்மாரை திட்டித் தீர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தாய்மார் ஐந்து ஆறு பிள்ளைகளை வளர்க்கின்றார்கள் எனவும், சிங்கள தாய்மாருக்கும் பிள்ளைகளை பெற்று வளர்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடிந்தளவு சிங்கள இனத்தை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிங்கள இனத்தை போசிக்க வேண்டுமாயின் கூடுதலான பிள்ளைகளை தாய்மார் பெற்றெடுக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply