குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
நாட்டுக்கு மிகவும் ஆபத்தான சட்ட மூலமொன்றை அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கண்டி கட்டம்பே பிரதேசத்தில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றின் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் புதிய சட்டம் மிகவும் ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
படைவீரர் ஒருவர் அல்லது அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கமொன்று, வெளிநாடொன்றை பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவனமொன்று முறைப்பாடு செய்தால் அந்த நபரை, குறித்த நாட்டுக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கைக்கு ஏற்படும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து மாநாயக்க தேரர்கள் புரிந்து கொண்டு அவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.