குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட முன்னர் ஆலடி சந்தியில் சுவிஸ் குமார் கறுத்த கண்ணாடி அணிந்தவாறு டெல்பின் ரக வாகனத்தில் இருந்து வித்தியாவை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவருடன் வாகனத்தில் ஆறு பேர் இருந்தனர் அவர்களும் வித்தியாவையே பார்த்தனர். என குறித்த வழக்கின் 7ஆவது சாட்சியான ஞானேஸ்வரன் இலங்கேஸ்வரன் சாட்சியம் அளித்துள்ளார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது , குறித்த வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை , மொரட்டுவா பல்கலைகழக கணணி விஞ்ஞான பீடத்தின் அறிக்கை உட்பட வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றினால் நீதாய விளக்கத்திற்கு (ரயலட் பார்) பரப்படுத்தப்பட்டது.