உலகம்

பிரான்ஸ் ஜனாதிபதியை தாக்க திட்டமிட்ட இளைஞர் கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை   தாக்குவதற்கு திட்டமிட்ட இளைஞர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 23 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள Bastille Day parade   நிகழ்வில் வைத்து பிரான்ஸ் ஜனாதிபதியை தாக்க இந்த இளைஞர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீடியோ கேம் சட் ரூமில் தாக்குதல் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதன் அடிப்படையில்  குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்மை ஓர் தேசியவாதி என விசாரணைகளின் போது குறித்த இளைஞர் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். கறுப்பினத்தனவர்கள், அரேபியர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், யூதர்கள் போன்றவர்களுக்கு எதிரான கருத்துக்களை குறித்த இளைஞர் வெளியிட்டு வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply