குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசன சபையிலிருந்து கூட்டு எதிர்க்கட்சி விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது. தேர்தல்களை அரசாங்கம் தொடர்ந்தும் ஒத்தி வைக்கின்ற காரணத்தினால் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருவதனால் அரசியல் சாசன சபையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதில் எவ்வித பயனும் கிடையாது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி. ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசன சபையிலிருந்து விலகிக் கொள்வது குறித்து இன்று நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் கூட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது