குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்ச்சைக்கரிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு நிதி அமைச்சு சகல நிதி நிறுவனங்களிடமும் கோரியுள்ளது.
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலேயே இவ்வாறு அறிக்கை கோரப்ப்பட்டுள்ளது.
ஏதேனும் சர்ச்சைக்குரிய அல்லது சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குறித்து மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறும் நிதி அமைச்சு கோரியுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இது குறித்து நிதி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் இரகசியமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு இது பற்றி அறிவிக்காது சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்கள் பற்றி அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திடீரென வைப்புச் செய்யப்படும் பெருந்தொகைப் பணம், குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு நீண்ட காலத்திற்கு கணக்குகளை பேணுதல், அசாதாரண கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அறிவிக்;குமாறு கோரப்பட்டுள்ளது.