176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க பயண எச்சரிக்கைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு முச்சக்கர வண்டி சாரதிகள் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த அறிக்கை தொடர்பில் கொழும்பு முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதிகள் நேற்றைய தினம் போராட்டமொன்றையும் நடத்தியுள்ளனர்.
பயண எச்சரிக்கையை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு கோரி முச்சக்கர வண்டி சாரதிகள், இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்திடம் மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.
Spread the love