அண்மையில் இடம்பெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு;கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் இதுபோன்ற கோரிக்கைகளை உள்ளடக்கிய ஏனைய மனுக்களுடன் இதனையும் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.சர்மா அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் பொதுநல மனுவையும் சேர்த்து விசாரிக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
இந்த மனுக்களை ஒன்றாக சேர்த்தால் தன்னுடைய மனு நீர்த்துப் போய் விடும் எனத் தெரிவித்ததனைத் தொடர்ந்து இந்த மனு மீது 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.