இலங்கை

பலவந்தமான கடத்தல்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச பிரகடனம் குறித்த சட்டம் நீக்கப்பட வேண்டும் :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சர்வதேச பிரகடனம் குறித்த சட்டத்தை நீக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பலவந்தமான கடத்தல்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச பிரகடனம் குறித்த சட்டம் தற்காலிக அடிப்படையில் நிறுத்தப்படாது முற்று முழுதாக தடை செய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரகடனம் குறித்த சட்டத்தை இலங்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட முடியாது எனவும் இலங்கையில் அது செல்லுபடியாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சும் அதன் அதிகாரிகளும் இந்த பிரகடனத்தில் கையொப்பமிட்டு பாரிய தவறிழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை வெற்றிகொண்ட படைத் தளபதிகள், அதற்கு தலைமை தாங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இந்த சட்டத்தின் ஊடாக பெரும் பாதுகாப்பாற்ற நிலைக்கு தள்ளப்படுவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் வெளிநாடு ஒன்று இலங்கைப் பிரஜை ஒருவரை அந்நாட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை விதிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply