குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் இரகசியமாக தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு வருகின்றது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்காக அரசாங்கம் அமெரிக்காவிலிருந்து ஒர் கருவியை தருவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கையடக்கத்தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கக்கூடிய வகையிலான கருவிகளை தற்போதைய அரசாங்கம் தருவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தொலைதொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பு இன்றி அரசாங்கத்தினால் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியாது என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.