குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான சட்டங்களை இயற்றும் பொறுப்பு கட்சித் தலைவர்களையே சாரும் என அவர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இது தொடர்பான சட்ட வரைவுத்திட்டம் ஏற்கனவே பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் இந்த சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள அவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள் பைசர் முஸ்தபா சட்டத்தை நிறைவேற்றினால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகளை அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.