இந்தியா

எட்டு இந்திய மீனவர்கள் கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எட்டு இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எட்டு மீனவர்களுடன் இரண்டு மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மீனவர்கள் பொட்டம் ட்ரோலிங் முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினரும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரும் கூட்டாக இணைந்து இந்த மீனவர்களை கைது செய்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 8 other subscribers