160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரியுள்ள அவர் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் செயற்படுவதே மிகவும் பொருத்தமானதாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love