குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான மிக முக்கியமானதும் பாரதுமானதுமான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் ராஜபக்ஸக்களுக்கு எதிரான முக்கியமான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்த இணங்கியுள்ளனர். எதிர்வரும் மூன்று மாதங்களில் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு என்பன ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறைந்தபட்சம் மூன்று மாத காலத்திற்கு இவ்வாறு இரண்டு நிறுவனங்களும் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்படலாம் என அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.