171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலநிலை மாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கல் தெரிவித்துள்ளார். ஜீ20 மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மற்றும் வர்த்தக விடயங்கள் தொடர்பிலான ஜீ20 தலைவர்கள் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேசம் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்த விடயமே என தெரிவித்துள்ள அவர் பேதங்களை களைந்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அகுறிப்பிட்டுள்ளார்.
Spread the love