191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்ட விவகாரங்களில் தாம் தலையீடு செய்வதில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்குத்துறை அதிகாரிகள் சுயாதீனமாக இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வித அரசியல் தலையீடுகளும் பிரயோகிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் தமக்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு வேறு ஒர் அமைச்சு வழங்கப்பட்டாலும் அதனையும் பொறுப்புடன் செயற்படுத்த தயாராக உள்ளதாக தெரிவித்த சாகல , பதவி வழங்குவது ஜனாதிபதியினதும் பிரதமரினதும் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love